Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை – ராஜஸ்தான் தனியார் நிறுவனம் தாராளம்!

0
Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை - ராஜஸ்தான் தனியார் நிறுவனம் தாராளம்!
Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை - ராஜஸ்தான் தனியார் நிறுவனம் தாராளம்!

செப்டம்பர் 3ம் தேதி திரைக்கு வரவுள்ள Money Heist என்ற வெப்சீரிஸை பார்ப்பதற்காக ராஜஸ்தானை சேர்ந்த வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

படம் பார்க்க லீவு:

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற வெப் சீரிஸ் Money Heist என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சீரியஸிற்கு பல்வேறு நாடு மற்றும் மொழியைச் சார்ந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முன்பு வரை இந்த திரைப்படத்தின் நான்கு பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இதன் 5-ம் பாகம் வெளி வர உள்ளது. இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை
Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை

இந்த நிலையில், Money Heist வெப் சீரிஸ், வெளியாக உள்ள செப்டம்பர் 3ம் தேதி எப்போது வரும் எனக் காத்திருக்கின்றோம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் தங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எப்படி அனுமதி பெறுவது என்ற குழப்பத்தில் தவித்து வந்தனர். இதனை கவனித்த தனியார் நிறுவனம் வினோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ஊழியர்களை மகிழ்வடைய வைத்திருக்கிறது.

Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை
Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை

இதனை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலைமையமாக வைத்து இயங்கி வரும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் “நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே” என்று பெயரிட்டு செப்டம்பர் 3 அன்று ஊழியர்களுக்கு மொத்தமாக விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், இந்த நாளில் தங்களது ஊழியர்கள் பொய் சொல்லி விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும், தேவையற்ற குழப்பம் உருவாவதை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here