இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்குள் நுழைய உள்ள வழிகள் இது மட்டும் தான்…, முழு விவரம் உள்ளே!!

0
இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்குள் நுழைய உள்ள வழிகள் இது மட்டும் தான்..., முழு விவரம் உள்ளே!!
இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்குள் நுழைய உள்ள வழிகள் இது மட்டும் தான்..., முழு விவரம் உள்ளே!!

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான வழிகள் குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

இந்திய அணி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின், 4 டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை, 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றுவதில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், வரும் 9ம் தேதி தொடங்க உள்ள, 4வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒருவேளை இந்திய அணி, இந்த 4வது டெஸ்ட் போட்டியை இழந்தால், தொடரை சமன் செய்து விடும். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்படும். அதாவது, WTC புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு அடுத்தாக, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உள்ளன. இதில், தென் ஆப்பிரிக்கா அணியானது, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரஷ்ய வீரரை எதிர்கொள்ளும் நோவக் ஜோகோவிச்!!

இதில், முதல் போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி 2வது போட்டியிலும் வென்றால் இந்திய அணிக்கு வாய்ப்பு குறைவு. இதே போல, மார்ச் 9ம் தேதி முதல், நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது. இதில், இலங்கை அணி வென்றால் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கேள்விக்குறிதான். இதற்கு, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை வென்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பார்க்காமல் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். இதனால், தான் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here