2023 ODI உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனின் இறுதிப்போட்டி மிகப் பிரம்மாண்டமாக அரங்கேறியது. அந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதில், உலக கோப்பை அரையிறுதி சுற்றில் நாக் அவுட் முறையை நீக்கிவிட்டு ப்ளே ஆஃப் முறையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த கருத்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் முறையில் தான் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் புதிய பூகம்பம்., கண்கலங்கிய போட்டியாளர்கள்., மனம் நொந்து போன தருணம்., BB ப்ரோமோ!!