IND vs NZ: 16 பந்தை எதிர்கொண்டாலும் சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

0
IND vs NZ: 16 பந்தை எதிர்கொண்டாலும் சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!
IND vs NZ: 16 பந்தை எதிர்கொண்டாலும் சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின், கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர், சுரேஷ் ரெய்னா மற்றும் கபில் தேவ் இவர்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்:

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்திருந்தது. இதில், முன்கள வரிசையில் உள்ள வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

குறிப்பாக, தமிழ் நாட்டை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 37 ரன்களை எடுத்துள்ளார். இந்த போட்டியில், இவர் அதிகபட்சமாக 231.25 ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்து அதிரடி காட்டியுள்ளார். இதன் மூலம், இவர் முன்னாள் இந்திய வீரர்களின் சாதனைகளை முறியடித்துள்ளார். அதாவது, கடந்த 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

அறிமுக போட்டியில் அசத்திய உம்ரான் மாலிக்…, 153 கி மீ வேகத்தில் வீழ்ந்த முக்கிய விக்கெட்டுகள்!!

இந்த சாதனையை தற்போது வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார். மேலும், 30 வருடங்களுக்கு முன் கபில் தேவ் நியூசிலாந்துக்கு எதிராக 206.25 ஸ்ட்ரைக் ரேட் எடுத்திருந்தார். இவருக்கு பிறகு சுரேஷ் ரெய்னா 211.11 ஸ்ட்ரைக் ரேட் எடுத்து இந்த சாதனை முறியடித்திருந்தார். தற்போது சுரேஷ் ரெய்னாவை வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட் எடுத்து பின்னுக்கு தள்ளி விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here