ஆன்லைன் வாயிலாக இனி ஓட்டுப் போடலாம்?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

0

தேர்தல் ஆணையம் தற்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்கலாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கட்சிகள் இறங்கியுள்ளதை போலவே தேர்தல் ஆணையமும் பணிகளை தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலுக்காக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சிறப்பான வசதிகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு சாவடிகளில் சாய்வு நாற்காலி, கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகள் மக்களுக்கு செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

லோன் ஆப்பிடம் கடன் வாங்காதீர் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க முடியுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதத்தினை எழுதினார். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் இந்திய அரசிலமைப்பு சட்டத்தில் இது குறித்து திருத்தம் கொண்டு வரபட்டால் இதற்கான பணிகளில் இறங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here