இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் கூடிய விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதற்கான சிறப்பு முகாம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்க பட்டிருந்தது.
அதன்படி இம்மாதம் 18 மற்றும் 19 ஆம் தேதி முகாம் நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது. மேலும் தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் வருகிற 18 ஆம் தேதி அரசு பணி நாளாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 18, 19 ஆம் தேதியில் நடக்க இருந்த சிறப்பு முகாம் 25,26 ஆம் தேதியில் நடத்தப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.