வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு.,, கிளம்பிய பெரும் சர்ச்சை!!

0
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு.,, கிளம்பிய பெரும் சர்ச்சை!!
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு.,, கிளம்பிய பெரும் சர்ச்சை!!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இருப்பினும் இதில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணியை, பல மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதாவது வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருந்தால் அவற்றை கண்டறியவும் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தமிழகத்திலும் ஒவ்வொரு வீடாக சென்று அதிகாரிகள், ஆதார் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், தமிழகத்தில் 33% க்கு மேலாக இந்த இணைப்பை செய்து விட்டதாக தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் சில அதிகாரிகள், வாக்காளர்களை வற்புறுத்தி ஆதார் இணைப்பை மேற்கொள்வதாக சர்ச்சை எழுந்தது. இதை அறிந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆதார் அறிந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு.,, தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இதுமட்டுமல்லாமல் இந்த இணைப்பு கட்டாயம் இல்லை என்று தேர்தல் ஆணையமும் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் தற்போது உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி பி.என்.பானர்ஜி ‘ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது பெரும் தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here