Friday, April 19, 2024

புதிய பிராண்டாக அறிமுகமாக இருக்கும் “Vi” – வோடபோன் புதிய முயற்சி!!!

Must Read

“Vi” என்ற பெயரில் புதிய பிராண்டினை வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நிலுவை தொகையினை கட்டுவதற்காகவும் நிதி திரட்டுதலுக்காகவும் உருவாகியுள்ளது இந்த தகவலை வோடபோன் மற்றும் ஐடியா தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் தெரிவித்துள்ளார்.

வோடபோன் மற்றும் ஐடியா கூட்டு:

கடந்த 2018 ஆம் ஆண்டு தொலைத்தொடர் நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் கூட்டாக இணைந்தது. பின், இந்த நிறுவனத்திற்கு வோடபோன் ஐடியா என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த கூட்டுக்கு முன்பு வோடபோன் 400 மில்லியன்க்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டு இருந்தது. ஆனால், ஐடியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பின் தற்போது வெறும் 208 பில்லியன் பயனாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. இது மிகப்பெரிய சரிவாக அந்த நிறுவனத்தின் மத்தியில் கருதப்படுகிறது.

பெரும் சரிவு:

இந்த பெரும் சரிவால் 50,000 ரூபாய் கோடி நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனம் புதிதாக “Vi” என்று ஒரு ப்ராண்டினை அறிவித்துள்ளது. இதன் மூலமாக நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த இரு நிறுவனங்களின் கூட்டு வாரியமான “Vi” கடன் மற்றும் பங்கு வாரியம் மூலமாக 25,000 கோடி நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

vodafone and idea
vodafone and idea

இந்த மாதத்தின் இறுதியில் வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது, அப்போது இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிலுவைத்தொகையின் 10 சதவீதத்தை அடுத்த நிதியாண்டில் வழங்க வேண்டும் என்றும், இந்த நிதியாண்டில் 10 தவணையாக செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு:

இந்த புதிய முயற்சி குறித்து வோடபோன் மற்றும் ஐடியா தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் தெரிவித்ததாவது “இந்த இரு நிறுவனங்கள் இணைந்தது ஒருங்கிணைப்பின் உச்சம். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை வழங்குவதில் Vi கவனம் செலுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -