இனி ரீசார்ஜ் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ளலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

0

வோடபோன் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரீசார்ஜ்

கடந்த ஆண்டு வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இணைத்து Vi என்ற புதிய நிறுவனமாக உருவாகியது. இப்படி புதிதாக உருவாக்கப்பட்டதால் ரீசார்ஜ் பிளான்களில் பல மாற்றங்கள் இருந்தது.

மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா வாக்கு சீட்டு முறை?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

இப்படியாக இருக்க வோடபோன்-ஐடியா சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, Vi App மற்றும் Paytm போன்றவற்றில் இருந்து தான் ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதி இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த வசதி தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதற்காக வழிமுறைகள் இதோ.,

  • 654297000 என்ற அதிகாரப்பூர்வ வோடபோன் – ஐடியா நிறுவனத்தின் எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் “ஹாய்” என்ற மெசேஜ் அனுப்பவும்.
  • பின், உங்களது வோடபோன் நம்பரை உறுதி செய்ய வேண்டும் என்று பதில் ரிப்ளை வரும். அதில் சரி என்பதற்கு 1 என்ற எண்ணும் வேண்டாம் என்பதற்கு 2 என்ற எண்ணும் வழங்கப்பட்டிருக்கும்.
  • அதில் 1 என்று டைப் செய்து மெசேஜ் செய்யவும். பின், உங்களது நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அதனை டைப் செய்து அனுப்பவும்.
  • பின்பு, (ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருப்பின்) உங்களக்கு ரீசார்ஜ் பிளான் குறித்த விவரங்கள் அனுப்பப்படும்.
  • (போஸ்ட்பைட் வாடிக்கையாளராக இருப்பின்) கட்டண இணைப்பை பெறுவீர்கள், அதனை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். அவ்ளோ தான்!!

இந்த ஈஸியான வசதி வாடிக்கையாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைத்த போது பல பிரச்சனைகள் இருந்தன. அதனை தீர்ப்பதற்காக தான் இந்த வாட்ஸ்அப் எண் துவக்கப்பட்டது. தற்போது மக்களின் குறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here