மீசையை முறுக்கி தனுஷ் பாடலுக்கு செம கியூட்டாக ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி எழில்…!லைக்ஸ்களை அள்ளும் வீடியோ உள்ளே!!!

0

விஜய் டிவியில் பல புது புது திருப்பங்கள் உடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவின் இளைய மகன் எழில் கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் விஜே விஷால். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் பாடலுக்கு மீசையை முறுக்கி ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

விஜே விஷால் :

வெளிச்சம் டிவியில் ஒரு  தொகுப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜே விஷால். அதன் பிறகு வேந்தர் டிவியில் ஒரு சில  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல்.

அந்த சீரியலில் அம்மாவுக்கு பிடித்த, அம்மாவுக்கு சப்போர்ட் செய்யும் ஒரு மகனாக நடித்து பட்டைய கிளப்பி இருப்பார். மேலும் தன் தங்கைக்கு நல்லதொரு அண்ணாகவும், குடும்பத்தில் இருக்கும் அனைவர் மீதும் பாசம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரின் இந்த எழில் கதாபாத்திரத்திற்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு எழில் கதாபாத்திரத்தில் விஜே விஷால் வாழ்ந்திருப்பார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மீசையை முறுக்கி செம கியூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் இவரின் இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை அவரின் ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here