விஜே தீபிகாவிற்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா.., கடைசில சாதிச்சு காட்டிடீங்களே!!

0
விஜே தீபிகாவிற்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா.., கடைசில சாதிச்சு காட்டிடீங்களே!!
விஜே தீபிகாவிற்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா.., கடைசில சாதிச்சு காட்டிடீங்களே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலமான விஜே தீபிகா தற்போது தனது ரசிகர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டது பற்றி கூறியுள்ளார். மேலும், அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜே தீபிகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே தீபிகா. இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்குப் பிறகு சில சூழ்நிலைகளின் காரணமாக சீரியலில் இருந்து விலகி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே என்னும் சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தீபிகா தனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளதாக ஒரு பதிவு ஒன்றை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதாவது சிறுவயதிலிருந்து எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என மிகவும் ஆசை. மேலும், அந்த ஆசை தற்போதுதான் நிறைவேறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், நான் கட்டியிருப்பது சாதாரண கூலிங் சீட் போட்ட வீடுதான். தன்னுடைய உழைப்பிலேயே முழுக்க முழுக்க வீடு கட்டியதால் மனநிறைவாக இருக்கிறது என தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் பலரும் தீபிகாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here