ஏன் இப்படி கெஞ்ச வைக்கிறீங்க… உண்மை முகத்தை வெளிப்படுத்திய தொகுப்பாளினி டிடி!!!

0

தமிழ் மக்களுக்கு மிக சிறந்த தொகுப்பாளினியாக அறியப்பட்டவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் துளியும் மேக்கப் இல்லாமல் தன்னுடைய ஒரிஜினல் பியூட்டியில் உள்ளார்.

தன்னுடைய சிறுவயதிலேயே திரைக்கு வந்தவர் தொகுப்பாளினி டிடி. அதன் பிறகு மெல்ல மெல்ல  பல டிவி ஷோக்களில் தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை நிரூபித்தவர். மேலும் இவர் பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும்  பணியாற்றி  உள்ளார். இருப்பினும் அவருக்கு திருப்புமுனை கொடுத்த டிவி ஷோக்கள் என்றால் அது விஜய் டிவி ஷோக்கள் தான்.

அந்த டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சி அவருக்கு முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. அதை தொடர்ந்து பாய்ஸ்  Vs  கேர்ள்ஸ், காபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.மேலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவரின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தற்போது வளர்ந்து வரும் இளம் தொகுப்பாளினிகளுக்கு இவர் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சிறிதும் மேக்கப் இல்லாமல் சிவந்த கன்னங்கள் உடன் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த வீடியோவின் கீழ் பகுதியில்  சேர்த்து ‘Might delete Later’ என்ற வரிகளையும் இணைத்து உள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் Don’t delete என்பது போன்ற கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here