சித்ரா மரண வழக்கு விசாரணை, 250 பக்க குற்ற அறிக்கை தயார் – ஹேமந்த தான் குற்றவாளியா??

0
அதிரடியாக திசை மாறிய விஜே சித்ரா மரண வழக்கு - ஹேமந்த்துக்கு எதிராக நண்பர் அளித்த வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது. மேலும் பதிவு திருமணம் நடந்த இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் இந்த விசாரணையை ஆர்.டி.ஓவிற்கு மாற்றினர். தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் 250 பக்க அறிக்கையை ஆர்.டி.ஓ போலீசார் தயார் செய்துள்ளனர்.

சித்ரா தற்கொலை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவருக்கும் ஹேமந்த் என்பவருக்கு லாக்டவுன் சமயத்தில் நிச்சயம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் நிலையில் சித்ரா திடீரென பிரபல நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு அவரது வருங்கால கணவரான ஹேமந்தும் இருந்ததால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் தான் சித்ராவிற்கும், ஹேமந்த்திற்கும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. திருமணம் ஆகி 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ.,விற்கு மாற்றப்பட்டது.

‘நான் என் கருத்தை சொல்லி தான் தீருவேன்’ – பாலாவை வம்புக்கு இழுக்கும் அனிதா!!

இதனால் கடந்த 10 ஆம் தேதி ஆர்.டி.ஓ போலீசார் ஹேமந்த்திடம் விசாரணையை ஆரம்பித்தனர். மேலும் சித்ராவுடன் நடித்த துணை நடிகர்கள், கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என அனைவரையும் ஆர்.டி.ஓ விசாரணை செய்தது.

சித்ராவின் அக்கா, அண்ணன், அம்மா, அப்பா என அனைவரையும் விசாரணை செய்தனர். இப்பொழுது விசாரணை முடிவடைந்த நிலையில் ஆர்.டி.ஓ சித்ரா தற்கொலை பற்றிய 250 பக்க அறிக்கையை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது. அதில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணம் கிடையாது. வேறு ஏதோ காரணம் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here