விஜே சித்ரா வழக்கில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – ஹேம்நாத் அளித்த பகீர் வாக்குமூலம்!!

0
விஜே சித்ரா வழக்கில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - ஹேம்நாத் அளித்த பகீர் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பரபரப்பு குற்றச்சாட்டு  :

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்தாண்டு, நட்சத்திர விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு, இவருடைய கணவர் ஹேம்நாத் தான் காரணம் என, சித்ராவின் பெற்றோர் புகார் அளித்தனர்.  இது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது, இவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் என  நீதிமன்றத்தில் புகார் அளித்தார். மேலும், சித்ராவின் வழக்கில்  இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றம் சுமத்தினார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பதில் அளித்த ஹேம்நாத் தரப்பு, அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் என்னை ஏன் இப்படி சிக்க வைக்க வேண்டும். எனக்கும் அவரது மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என  மீண்டும் வாதிட்டார்.   ஆனால், ஹேம்நாத்துக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதால்  வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி  ஹேம்நாத் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here