
பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது கணவரை விவாகரத்து செய்ய இருந்ததாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பெரும் சர்சையை கிளப்பியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா
சன் டிவி சேனலில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. அதன் பிறகு இந்திய கடற்படை வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கொஞ்சம் வருடங்களாக டிவி பக்கம் ஒதுங்காம இருந்த அர்ச்சனா, வரிசையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ஷோக்கு பிறகு இவர் குறித்து பல ட்ரோல்கள் இணையத்தில் பரவின. எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனியாக யூடுப் சேனலை நடத்தி, தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அர்ச்சனா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது, நாங்கள் இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் எங்களுக்குள் தொடர்ந்து பிரச்சனை வந்தது.
100% பாக்கியாவுக்கு ஜோடி பழனிசாமி தான்.., கோபி இனி உங்க ஆட்டம் செல்லாது.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!
அதனால் கடந்த மாதம் இருவரும் விவாகரத்து செய்ய இருந்ததாக முடிவெடுத்துவிட்டோம். ஆனால் எனது கணவர் வினீத்தை 15 நாட்கள் முன்பு விசாகப்பட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். அப்போது என் மகள் சாரா, எங்கள் இருவரையும் யோசித்து முடிவெடுக்க சொன்னாள். அதன் பின் இருவரும் இருபது வருடத்திற்கு முன்பு எப்படி காதலித்தமோ அதை நினைத்து தற்போதும் காதலித்து வருவதாக அர்ச்சனா தெரிவித்திருந்தார்.