பிக் பாஸ் அர்ச்சனா மகளை கலாய்க்கும் நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த சாரா!!

0

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவை சமூக வலைத்தளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர். சாரா தற்போது வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அர்ச்சனா மகள் சாரா

அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் விஜே அர்ச்சனா. தவிர சில தமிழ் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விஜேவுக்குரிய பாணியில் கலகலப்பாக பேசக்கூடிய அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – 8 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து தவிக்கும் இங்கிலாந்து அணி!!

சில சமயங்களில் மக்களின் ஆதரவையும், சில சமயங்களில் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்த அர்ச்சனா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சி அர்ச்சனாவின் மகள் சாராவை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் செய்தது . ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியில் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சாரா.

வலைதளத்தில் விஜே அர்ச்சனாவை பற்றி வரும் எதிர்மறையான கருத்துகளுக்கெல்லாம் பதில் கூறி வந்தார் சாரா.  இதனால் சிறு வயதிலேயே முதிர்ச்சியான கருத்துக்களை பேசுகிறார் சாரா என வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள். சாரா  இந்த கருத்துகளுக்கெல்லாம் பதில் கூறும் விதத்தில் பாடல் ஒன்றை பாடி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here