அட கொடுமையே.. விஜே அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு சோகமா., கண்ணீர் மல்க மகளை நினைத்து உருக்கம்!

0
அட கொடுமையே.. விஜே அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு சோகமா., கண்ணீர் மல்க மகளை நினைத்து உருக்கம்!

தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினி விஜே அர்ச்சனா தனது மகளான சாராவை குறித்து கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அர்ச்சனா- சாரா:

முக்கிய தமிழ் சேனல்களில் பணியாற்றி மக்களிடம் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. அவருடைய துருதுரு பேச்சும் மற்றும் குறும்புத்தன சேட்டைகளும் எக்கச்சக்கமான ரசிகர்களை இவருக்கு பெற்று தந்தது. அதுமட்டுமின்றி தன்னை போலவே தனது மகள் சாராவையும் தொகுப்பாளினி ஆக்கி அழகு பார்த்து வருகிறார்.  தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற ஷோவான சூப்பர் மாம் நிகழ்ச்சியை அம்மாவும், மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் மகள் சாராவை குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார் அர்ச்சனா. அதாவது, எனது மகள் பள்ளியில் படிக்கும் பொழுது அவருடன் எந்த மாணவர்களும் நண்பர்களாக பழகவில்லை, காரணம் சினிமாத்துறையில் என் மகள் பணியாற்றுவதால் தான். வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஆறுதல் கூறவும், சந்தோசத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு நண்பன் கட்டாயம் தேவை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் என் பிள்ளைக்கு அந்த பாக்கியம் இல்லை என்று மனவருத்தத்துடன் கூறினார். அதற்கு சாரா, ” என் அம்மா தான் எனக்கு பெஸ்ட் ப்ரண்ட், அவங்கள நான் அப்படி தான் பாக்குறேன், கஷ்டம் வந்தாலும் அவங்க தோளுல சாய்ந்து கொள்வேன், அவர்கள் தான் எனக்கு எல்லாமே” என்று கண்ணீர் வடிந்த படி பேசினார். இந்த பேச்சுக்களைக் கேட்ட அர்ச்சனா மேலும் கண்கலங்கி மகளை கட்டி அணைத்து கொண்டார். இவர்களின் இந்த பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here