ஒரே ஒரு ட்வீட்டால் அசிங்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி விஜே அஞ்சனா – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதை கேள்வி பட்ட பிரபல தொகுப்பாளினி விஜே அஞ்சனா அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நினைத்து சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் கூறுவதற்கு பதிலாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி பக்கத்தில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

விஜே அஞ்சனா:

சின்னத்திரை தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் வி ஜே அஞ்சனா. மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவு தன் திறமையின் வாயிலாக மக்களை கவர்ந்து விட்டார். ஒரு சில வருடத்திற்கு முன்பு கயல் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவருக்கு அழகான ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். அதை கேள்வி பட்ட வி ஜே அஞ்சனா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவிக்க நினைத்து கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான அஞ்சனா, ஒர்க் பிஸியில் மாற்றி ட்வீட் செய்து விட்டதாக கூறி பின்னர் கவனமாக சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here