மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு செய்த சிறப்பு – நெகிழ்ந்து போன நடிகரின் குடும்பத்தார்!!

0

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணராக திகழ்ந்த, மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை, தமிழக அரசு ஒரு தெருவுக்கு சூட்டிய சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர் நெகிழ்ச்சி:

தமிழ் சினிமாவின், மிகப் பெரிய காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், தன் காமெடியுடன் சமூகக் கருத்துக்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வந்தார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரை உலகத்தில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது, அவரின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் முதல்வரை சந்தித்து, கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, தனது கணவர் பெயரில் தெரு ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்ற தமிழக அரசு, விவேக் அவர்களின் பெயரில் ஒரு தெருவை திறந்து வைத்துள்ளது. இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விழாவில், விவேக்கின் மனைவி மற்றும் மகள்கள் ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here