காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதி சடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!!

0

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவரது இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

விவேக் இறுதி சடங்கு

இரு தினங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடிகர் விவேக் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் தமிழகமே மிரண்டது. மேலும் தமிழகத்தில் உள்ள மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை உலகினர் தற்போது விவேக்கிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இவர் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பதமஸ்ரீ உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

தற்போது இவரது மறைவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உட்பட பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இவரது இறுதி சடங்கை காவல்துறை மரியாதையுடன் நடத்துவதற்கு தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. தற்போது அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here