Tuesday, May 18, 2021

ரசிகர்கள் வெள்ளத்தில் சின்ன கலைவாணரின் இறுதி ஊர்வலம் – விருகம்பாக்கத்தை நோக்கி பயணம்!!

Must Read

மாரடைப்பு காரணமாக தனது உயிரை இழந்த தமிழ் சினிமாவின் நட்சத்திரம் விவேக்கின் இறுதி ஊர்வலம் ரசிகர்கள் வெள்ளத்தில் தற்போது தொடங்கியுள்ளது. தற்போது இவரது உடலை விருகம்பாக்கத்தில் தகனம் செய்யவுள்ளனர்.

இறுதி ஊரவலாம்:

தமிழ் சினிமாவில் தனது எதார்த்த நடிப்பு மற்றும் சமூக நல நகைச்சுவையின் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் விவேக். இவர் நேற்று (ஏப்ரல் 16) மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் தனது உயிரை இழந்தார். இதனால் திரை உலகம் மற்றும் தமிழக மக்களே அதிர்ந்து போகினர். மேலும் இவரது இறப்பிற்கு தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர், நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவரது இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. காரணம் இவர் தமிழக அரசிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 4 தேசிய விருதுகளை அள்ளியுள்ளார். மேலும் 5 முறை மாநில அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார் விவேக்.

Actor-Vivek-s-funeral-started-with-government-honors-

“மக்களின் நாயகன்” சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தற்போது இவரது இறுதி சடங்கிற்காக இவரது உடல் விருகம்பாக்கத்தை நோக்கி ரசிகர்களின் வெள்ளத்தில் கொண்டு செல்கின்றனர். அங்கு சென்ற பின்பு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும். மேலும் 78 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பூட்டிய கோவில் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

இன்று திருமணத்திற்கு ஏற்ற நாள் என்பதால் திருப்பரங்குன்றத்தில் பூட்டிய கோவிலில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். கோவில் முன்பு தாலி கட்டிய மணமக்கள்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வைகாசி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -