உடல் எடையை ஒட்டுமொத்தமாக குறைந்த அஜித் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக நடிகையாக வலம் வரும் வித்யுலேகா தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.

வித்யுலேகா ராமன்

தமிழில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். குணசித்ர நடிகரான மோகன் ராமனின் மகள் தான் வித்யுலேகா. இந்த விஷயம் தெரிந்து பலரும் ஆச்சரியமும் பட்டனர். அதன் பிறகு தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை கொள்ளைகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் கூட இவரது காமெடி பேசப்பட்டது அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோவைசரளா, மனோரம்மாவிற்கு பிறகு இவர் தான் காமெடி நடிகையாக வலம் வந்தார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் தான் தனது ஒட்டுமொத்த காமெடி திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார்.

எப்பொழுதுமே சந்தானத்திற்கு ஜோடியாகவே அனைத்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். வீரம் படத்தில் இவர் 1 சீனுக்கு மட்டுமே வந்தாலும் அது மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அடுத்தடுத்து விஜய், சூர்யா திரைப்படங்களில் கமிட்டானார். தற்போது இவர் உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தார்.

கர்ணன் படத்தை நேரடியாகவே கலாய்த்த விவேக் – வைரலாகும் ட்விட்டர்!!

அந்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்படி இந்த அளவிற்கு உடல் எடையை குறைதீர்கள் என்றும் கேள்வி அனுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here