கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து எப்போது என கேட்ட ரசிகர் – கிழித்து தொங்கவிட்ட அஜித் பட நடிகை!!

0

நீதானே என் பொன் வசந்தம், வீரம், ஜில்லா, ப.பாண்டி ஆகிய படங்களில் காமெடி நடிகையாக கலக்கியவர் வித்யுலேகா ராமன். இவருக்கு சென்ற வருடம் சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி வெகு விமர்சையாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

தற்போது இவர் தன் கணவருடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு விவாகரத்து எப்பொழுது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் கொந்தளித்த வித்யுலேகா உங்களின் மோசமான மனநிலையை என்னால் மாற்ற முடியாது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. வாழ்.. வாழ விடு என இன்ஸ்டாவில் ஸ்டோரி ஆக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here