சக்ரா படத்தை OTT இல் வெளியிட தடை – விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ்!!

0

சினிமா ஃபைனான்சியர் விஜய் கோத்தாரி, தனக்கு சேர வேண்டிய ரூ.58.35 லட்சத்தை தரவேண்டி விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்க, M.S. ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சக்ரா” திரைப்படத்தில் ஷ்ரத்தா, ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் முடிவடைந்து, கடந்த மே மாதம் 20ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பல படங்களும் ரிலீசாகாவிலை. அப்போது படங்களை வெளியிட சிறந்த மீடியாவாக OTT தளம் அறிமுகமானது ஜோதிகாவின் தெய்வத்திருமகள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது விஷாலின் சக்ரா படமும் OTT யில் வெளியிடப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ” என்ற நிறுவனம் தங்களுக்கு சொன்ன அதே கதையை இயக்குனர் விஷாலிடமும் சொல்லி அது படமாக எடுக்கப்பட்டதாகவும், படத்தை OTT யில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்.

காட்டுத்தனமான கவர்ச்சியில் களமிறங்கிய சமந்தா!!

தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு 8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமெனவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை ஏற்ற நீதிமன்றம், இருதரப்பும் பேசி சமாதானமாக போகும் படியும், செப்டம்பர் 30 வரை படத்தை OTT யில் வெளியிடக் கூடாது எனவும் தடை விதித்திருந்தது. தற்போது அனைத்தும் சரியாகி மீண்டும் OTT யில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, விஜய் கோத்தரியின் இந்த வக்கீல் நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here