பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஷால் பட நடிகைக்கு கொரோனா – அச்சத்தில் படக்குழுவினர்!!!

0

நடிகர் விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தின் நாயகி டிம்பிள் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

டிம்பிள் ஹயாத்தி:

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டிம்பிள் ஹயாத்தி. மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் நடிப்பில் வரவுள்ள வீரமே வாகை சூடும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் இன்று நடிகை டிம்பிள் ஹயாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இந்த கேள்வி பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here