பெண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை….,இப்படியும் இருப்பார்களா…..,

0
பெண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை....,இப்படியும் இருப்பார்களா.....,
பெண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை....,இப்படியும் இருப்பார்களா.....,

நடிகர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அபிராமி ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘தோஸ்த்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, பல தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அபிராமி.

கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அபிராமி சினிமாவை விட்டு விலகினார். இதற்கிடையில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நடிகை ஜோதிகாவின் ’36 வயதினிலே’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அபிராமி. இந்த நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு பெற்றோராக மாறி இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை அபிராமி.

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோதிகா….,உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்….,

அதாவது, ‘நானும், ராகுலும் கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோராக மாறியுள்ளோம். கடந்த ஆண்டு கல்கியை தத்தெடுத்தோம். அவள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here