கிராமத்து விருமனாக மாஸ் காட்டிய கார்த்தி., ஸ்கோர் பண்ணிய அதிதி – வொர்த்தா, இல்லையா? முழு விமர்சனம்!!

0
கிராமத்து விருமனாக மாஸ் காட்டிய கார்த்தி., ஸ்கோர் பண்ணிய அதிதி - வொர்த்தா, இல்லையா? முழு விமர்சனம்!!

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்  இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விருமன் பட விமர்சனம்:

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் இன்று  மாநில முழுவதும் 475 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் ஷங்கரின் மூத்த மகள் அதிதி, கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். தற்போது படத்தின் ரசிகர்கள் விமர்சனம் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி ரசிகர் ஒருவர், விருமன் படம் வெறித்தனம் என்றும்  கார்த்தி மற்றும் அதிதி நடிப்பு வேற லெவல்,  பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் கொண்ட பிளாக்பஸ்டர் திரைப்படத்தை முத்தையா கொடுத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஒருவர் போட்டுள்ள பதிவில், கார்த்தி முத்தையா கூட்டணி அருமையாக அமைந்துள்ளது என்றும் யுவன் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் வேற லெவல் என பதிவிட்டுள்ளார்.

கதை, வசனம் என அனைத்தும் பெரிய அளவில் இருப்பதாகவும், நடிகர் நடிகைகள் அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்  எனக் குறிப்பிட்டு  திரைக்கதை சொதப்பல் என 5 க்கு 3 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

மற்றொரு நபர்  இந்த படத்துக்கு கொம்பன் படம் எவ்வளவோ மேல் என்றும், கார்த்திக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து எடுத்திருந்தால் படம் சூப்பர் என நெகட்டிவ் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, விருமன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று  குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here