“ஐபிஎல் தொடரில் இருந்து விலகுங்கள்”…, இந்திய வீரருக்கு சேவாக் எச்சரிக்கை!!

0
"ஐபிஎல் தொடரில் இருந்து விலகுங்கள்"..., இந்திய வீரருக்கு சேவாக் எச்சரிக்கை!!

ஐபிஎல் தொடரில் இருந்து, ஓய்வெடுக்க வேண்டும் என ரோஹித் சர்மாவுக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அறிவுறுத்தி உள்ளார்.

ரோஹித் சர்மா:

சர்வதேச இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது, ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்த வரும் மே 28ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தயாராக உள்ளது. இதனால், இந்திய வீரர்கள் அனைவரும், ஐபிஎல்லில் காயம் ஏற்படாதவாறு விளையாட வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், சிலரோ ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் விளையாடாமல், ஒரு சில போட்டிகளில் ஓய்வு எடுத்து விளையாட வேண்டும் எனவும் இந்திய வீரர்களுக்கு அறிவித்தனர். இந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சர்வதேச இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு, வீரேந்தர் சேவாக் தனிப்பட்ட முறையில் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

RCBயின் கனவு நினைவாகும் தருணம் வருமா?? பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வழி தான் என்ன??

அதாவது, ரோஹித் சர்மா கடந்த 5 போட்டிகளில், 7, 3, 2, 3, 2 என மொத்தமாகவே 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், ரோஹித் சர்மா சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு, புத்துணர்ச்சியுடன் அடுத்த போட்டிகளில் களமிறங்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். மேலும், ரோஹித் சர்மா ஏதோ ஒரு குழப்பத்தில் உள்ளார். அதிலிருந்து மீள்வதற்காகவாது, அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here