இந்திய வீரர் யாருமே இத பண்ணலையா., என்னப்பா சொல்றீங்க.., விராட்.., ரோஹித்தால் கிடைத்த பெருமை!!

0
இந்திய வீரர் யாருமே இத பண்ணலையா., என்னப்பா சொல்றீங்க.., விராட்.., ரோஹித்தால் கிடைத்த பெருமை!!

இதுவரை நடந்த T20 போட்டிகளில் விராட் மற்றும் ரோஹித் இருவரும் எந்த ஒரு இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளனர்.

ரோஹித் VS விராட்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவரும் இந்த போட்டியில் சாதனை படைத்து அசத்தியுள்ளனர். அதன்படி விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 28 பந்துகளில் 49 ரன் குவித்து அசத்தினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம் அனைத்து வகையான T20 போட்டிகளில் 11, 000 ரன்களை குவித்த, முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் பார்க்கும் போது அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட் 4 ஆம் இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 354 டி20 போட்டிகளில் விளையாடி 11,030 ரன்கள் விளாசியுள்ளார்.

தொடரும் பதக்க வேட்டை.., தமிழக வீரர்களின் மிரட்டலான ஆட்டம்.., நெருங்குவதற்கு பயப்படும் சக வீரர்கள்!!

இவரை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 400 T20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற மைல்கல்லை அடைந்தார். இந்த இருவரும் இதுவரை பல சாதனைகள் படைத்து பெருமைக்குரியவர்களாக திகழ்கின்றனர். ஆனாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் விளையாடி வருவதால் இன்னும் என்னலாம் பண்ண போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here