அனுஷ்காவிற்கு யோகாசனம் செய்ய உதவும் விராட் கோலி – வைரலாகும் புகைபடம்!!

0

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகரும், விராட் கோலி மனைவியான அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது மனைவியின் அருகிலேயே இருந்து பார்த்து கொள்ளும் விராட் கோலி அவருக்கு சிரசாசனம் செய்ய உதவி செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா சர்மா

மாடலிங் துறையில் இருந்த அனுஷ்கா ஷர்மா உத்ர பிரதேசத்தில் பிறந்தவர். ஆனால் அவர் வளர்ந்தது எல்லாமே பெங்களூர் தானாம். அவர் மாடலிங் துறையில் இருக்கும் போதே ஹிந்தியில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதுவும் ஷாருக்கான் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

virat-anushka
virat-anushka

அந்த படமும் ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் அனுஷ்கா சர்மா. இவருக்கும் கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2017 இல் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் லாக்டவுன் சமயத்தில் பல விடீயோக்களும் வெளியிட்டனர். அந்த வீடியோ டாப் ரேட்டிங்கில் வைரலானது.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா 3 வருடங்களுக்கு பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்திகள் பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. குட்டி விராட் வர போகிறார் என்றும் மகிழ்ந்து வந்தனர். இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து விராட் கோலி விலகினார். தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வீரர்கள் பலரும் பல நெருக்கடியுடன் விளையாடி கொண்டிருக்க விராட் கோலியின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது தன் மனைவியான அனுஷ்கா ஷர்மாவிற்கு சிரசாசனம் செய்ய உதவி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது பற்றி அனுஷ்கா சர்மா கூறும்போது, நான் ஆரம்பத்தில் இருந்து யோகா கலைகளை செய்து வருகிறேன். நான் கர்ப்பமாவதற்கு முன்னாள் செய்த சில யோகாவை மருத்துவர் செய்ய சொன்னார். அதில் ஒன்று இந்த சிரசாசனம். இதனை நான் செய்ய சுவரும், என்னை தாங்கி பிடித்துக்கொள்ள எனது கணவரின் உதவியும் தேவைப்படுவதாக கூறியுள்ளார் அனுஷ்கா சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here