ஒரு அரை சதத்தின் மூலம் பல சாதனை.. இத செய்றதுக்கு இவ்வளவு நாள் தேவையா!

0
ஒரு அரை சதத்தின் மூலம் பல சாதனை.. இத செய்றதுக்கு இவ்வளவு நாள் தேவையா!
ஒரு அரை சதத்தின் மூலம் பல சாதனை.. இத செய்றதுக்கு இவ்வளவு நாள் தேவையா!

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பார்மை மீட்டு எடுத்ததன் மூலம் பல சாதனைகளை குவித்து மீண்டும் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

விராட் கோலி!

இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் மிகவும் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. ஆனாலும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர் கடந்த சில வருடங்களாக மோசமான பார்மில் விளையாடி வந்த நிலையில் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி நேற்று அடித்த ஒரு அரை சதத்தின் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டின் சாதனையை சமன் செய்து, அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடிக்க காத்துக் கொண்டுள்ளார். அதாவது நேற்று அடித்த அரை சாதத்தின் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 194 அரை சதங்கள் அடித்ததை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

மேலும் 33 வயதான நட்சத்திர பேட்ஸ்மேன் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதம் மற்றும் 28 அரை சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் மற்றும் 64 அரை சதங்கள், இதனை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் 32 அரை சதங்களையும் குவித்துள்ளார். அதேபோன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 சதங்கள் மற்றும் 56 அரை சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 12 சதம் மற்றும் 83 அரை சதங்களும் அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடியதன் மூலம் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த சர்வதேச கிரிக்கெட் பேட்டர்களின் பட்டியலில் அதிக ரன் குவித்ததன் மூலம் 2வது இந்தியராக விராட் கோலி உள்ளார். முதல் இடத்தில் 664 போட்டிகளில் விளையாடி 264 அரை சதங்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். இதேபோன்று இனி வரும் போட்டிகளில் விராட் கோலி விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here