கோலிக்கே ஸ்கெட்ச்சா.. எதிரணி திட்டத்தை அசால்ட்டாக கணித்து விராத் செய்த வேலை – வைரல் வீடியோ!

0
கோலிக்கே ஸ்கெட்ச்சா.. எதிரணி திட்டத்தை அசால்ட்டாக கணித்து விராத் செய்த வேலை - வைரல் வீடியோ!
கோலிக்கே ஸ்கெட்ச்சா.. எதிரணி திட்டத்தை அசால்ட்டாக கணித்து விராத் செய்த வேலை - வைரல் வீடியோ!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலியை வீழ்த்த தீட்டிய அனைத்து திட்டங்களையும் தெரிந்து வைத்துதான் விராட் கோலி அதற்கு ஏற்றார் போல் ஆட்டத்தை மாற்றி விளையாடியுள்ளார்.

விராட் கோலி அசத்தல்!

ஆசிய கோப்பை தொடரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி பவுலர்கள் செய்த சிறு தவறுகளால் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் ஆசிய கோப்பை வரலாற்றில் முதன் முதலாக பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலியை வீழ்த்த எதிரணி வீரர்கள் பல திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அரை சதம் கடந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆட்டத்தின் 8 வது ஓவரின் போது முகமது நவாஸின் பந்துவீச்சை விராட் கோலி எதிர்கொண்டார்.

அப்போது, கோலி பந்துவீச்சாளரை கவனிக்க, அவருக்கு பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஆஃப் சைட் திசையில் ஒரு ஃபீல்டரை நகர்த்தி நிறுத்தினார். இதை கோலி கவனிக்கவில்லை என நினைத்துக் கொண்டு சைகை காட்ட அதை தனது ஓர கண்ணால் சாதுரியமாக விராட் கோலி தெரிந்து கொண்டார். இதனால் அந்த பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் விழாமல் தடுத்து அழகாக தப்பித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் தலைவனுக்கே ஸ்கெட்ச் ஆ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here