ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை குவிக்க இருக்கும் விராட் கோலி…, வெளியான புள்ளி விவரம் இதோ!!

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை குவிக்க இருக்கும் விராட் கோலி..., வெளியான புள்ளி விவரம் இதோ!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை குவிக்க இருக்கும் விராட் கோலி..., வெளியான புள்ளி விவரம் இதோ!!

ஐசிசி சார்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சீசன் கடந்த 2021 முதல் 2023 ஆண்டு வரை நடைபெற்று வருகிறது. 9 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா முதல் இரு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி போட்டியானது வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்காக இரு அணிகளும் இங்கிலாந்தில் தீவிரப் பயிற்சி செய்து வருகின்றனர். ஐபிஎல்லில் தொடர்ந்து அரை சதங்களை விளாசி தனது பேட்டிங் பார்மை தக்க வைத்துக் கொண்ட விராட் கோலி எதிர்வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிரடி காட்டி அரை சதம் விளாசினால் இரு மாபெரும் சாதனைகளை படைப்பார்.

ஓய்வூதியதாரர்களே., கால தாமதம் இல்லாமல் உயர் ஓய்வூதியம் பெறலாம்? EPFO அதிரடி உத்தரவு!!!

அதாவது, இந்த டெஸ்டில் விராட் கோலி 21 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 2000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரராக திகழ்வார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர், லட்சுமண், ராகுல் டிராவிட், புஜாரா இத்தகைய சாதனைகளை படைத்துள்ளனர். மேலும், இந்த டெஸ்டில் 55 ரன்கள் இவர் எடுத்தால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 5000 ரன்களை கடந்த 2 வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார். இவர், இதுவரை டெஸ்டில் 1979 ரன்களும், ஒருநாள் போட்டியில் 2172 ரன்களும் மற்றும் டி20யில் 794 ரன்களும் என மொத்தமாக 4945 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here