பங்களாதேஷ் வீரருக்கு பரிசு வழங்கிய விராட் கோஹ்லி…, எதுக்காகவா இருக்கும்?? அப்படி என்ன கொடுத்தார்??

0
பங்களாதேஷ் வீரருக்கு பரிசு வழங்கிய விராட் கோஹ்லி..., எதுக்காகவா இருக்கும்?? அப்படி என்ன கொடுத்தார்??
பங்களாதேஷ் வீரருக்கு பரிசு வழங்கிய விராட் கோஹ்லி..., எதுக்காகவா இருக்கும்?? அப்படி என்ன கொடுத்தார்??

இந்திய அணிக்கு எதிராக பங்களாதேஷின் லிட்டன் தாஸின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி விராட் கோஹ்லி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

விராட் கோஹ்லி:

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக போட்டியிட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி விடும். இதற்கு முடிந்த வரை, ஜிம்பாப்வே அணியானது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், இரு அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். சமீபத்தில் இந்திய அணி, பங்களாதேஷிற்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றி பெற்றது. இந்த போட்டியில், பங்களாதேஷின் லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 60 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார்.

இதன் மூலம், அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களுக்கான பட்டியலிலும் இவர் இணைந்துள்ளார். இந்நிலையில், இவரது திறமையை பாராட்டும் விதமாக, இந்திய அணியின் கிங் விராட் கோஹ்லி தனது பேட்டை லிட்டன் தாஸுக்கு பரிசாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here