பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ் காட்டிய பேட்ஸ்மேன் – ஒரு அரை சதத்தால் விராட் கோலி செய்த சம்பவம்!

0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ் காட்டிய பேட்ஸ்மேன் - ஒரு அரை சதத்தால் விராட் கோலி செய்த சம்பவம்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ் காட்டிய பேட்ஸ்மேன் - ஒரு அரை சதத்தால் விராட் கோலி செய்த சம்பவம்!

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அடித்த ஒரு அரைசதத்தின் மூலம் இந்திய அணியின் கேப்டனை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.

சாதனையை முறியடித்த விராட் கோலி!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆட்டத்தால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணியின் தோல்விக்கு பந்து வீச்சாளர்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்தது. ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவித்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆடி அரை சதம் கடந்தார். இந்த அரை சதத்தின் மூலம் பல சாதனைகள் புரிந்துள்ளார். அதன்படி தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதாவது டி20 போட்டியில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த விராட் கோலி முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். அதன்படி அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி (32), ரோகித் சர்மா (31), பாபர் அசாம் (27) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.

அதேபோன்று டி20 போட்டியில் அதிக ரன்கள் விளாசியவர் பட்டியலில் ரோகித் சர்மா (3548) ரன்களுடன் முதல் இடத்திலும், 2வது மற்றும் 3-வது இடங்கள் முறையே கப்தில் (3497), விராட் கோலி (3462) ரன்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இந்நிலையில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக ஆடினால் டி20 போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here