பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் தனது முதல் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியை விளையாடியது. இந்த போட்டியில், இந்திய அணியின் அதிரடியான பேட்ஸ்மேன்களால் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்து அசத்தியது. பாகிஸ்தான் அணியோ 32 ஓவரில் 128 ரன்களுக்கே சுருட்டிய, இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், விராட் கோலி 122* ரன்கள் விளாசியதன் மூலம் பல சாதனைகளை குவித்து அசத்தியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது,
- சர்வதேச அளவில் தனது 77 வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்து, அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
- ஒருநாள் அரங்கில் 47 வது சதத்தை விளாசிய விராட் கோலி, சச்சினின் 49 வது சதத்தை சமன் செய்ய தயாராக உள்ளார்.
- அதிவேகமாக சர்வதேச ஒருநாள் அரங்கில் 13,000 ரன்களை கடந்த 5வது சர்வதேச வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். ஒருநாள் அரங்கில் இவர், 267 இன்னிங்ஸில் 13,204 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஆசிய கோப்பைக்கான ஒருநாள் வடிவில் இதுவரை 4 சதங்கள் அடித்து, அதிக சதம் அடித்தவர்களுக்கான 2வது இடத்தை இலங்கையின் சங்ககாராவுடன் பகிர்ந்துள்ளார்.
- இந்த போட்டி நடைபெற்ற கொழும்பு மைதானத்தில், விராட் கோலி தொடர்ச்சியாக 4 வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- ஒருநாள் வடிவில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 3 வது இடத்தை விராட் கோலி ஆஸ்திரேலிய ஜாம்பவான் பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார்.
IND vs PAK: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா…, 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!!