இன்னும் ஒரு சதம் அடிச்ச போதும்…, விராட் கோலி அடைய இருக்கும் மாபெரும் சாதனை இதுதான்!!

0
இன்னும் ஒரு சதம் அடிச்ச போதும்..., விராட் கோலி அடைய இருக்கும் மாபெரும் சாதனை இதுதான்!!
இன்னும் ஒரு சதம் அடிச்ச போதும்..., விராட் கோலி அடைய இருக்கும் மாபெரும் சாதனை இதுதான்!!

சர்வதேச இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை விளையாடுவதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரின் மூலம், இந்திய அணியின் 2 முன்னணி வீரர்கள் இரு வெவ்வேறு சாதனைகளை படைக்க உள்ளனர். அதாவது, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 9825 ரன்களை குவித்துள்ளார். எதிர்வரும் இந்த தொடரில், இன்னும் 175 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 10,000 ரன்களை கடக்கும் 6 வது இந்திய வீரர் என்ற பெருமை அடைவார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவரை தொடர்ந்து, விராட் கோலி 46 சதங்கள், 65 அரைசதங்கள் உட்பட 12,898 ரன்களை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் குவித்துள்ளார். இவர், இனி வரும் ஒருநாள் போட்டிகளில் 102 ரன்கள் மட்டும் எடுத்தால் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதன் மூலம், ஒரு நாள் வடிவில் 13,000 ரன்களை கடந்த 2 வது இந்தியர் என்ற சாதனையை படைப்பர். இதற்கு முன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 18,426 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here