கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 2023 உலக கோப்பை தொடரானது மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியானது நாளை (நவம்பர் 15) நியூசிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் களமிறங்க உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி படைக்க போகும் சாதனை குறித்து இதில் காணலாம்.

அதாவது விராட் இப்போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ODI கிரிக்கெட்டில் 50 சதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சாதனையை தகர்த்துவார். கடந்த ஆட்டத்தில் விராட் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்து தனது 50 வது ஒருநாள் சதத்தை தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.