ICC தரவரிசை பட்டியல்.., 29 இல் இருந்து 15 க்கு முன்னேறிய விராட்.., ஒரு சதத்தால் கிடைத்த பெருமை!!

0
ICC தரவரிசை பட்டியல்.., 29 இல் இருந்து 15 க்கு முன்னேறிய விராட்.., ஒரு சதத்தால் கிடைத்த பெருமை!!
ICC தரவரிசை பட்டியல்.., 29 இல் இருந்து 15 க்கு முன்னேறிய விராட்.., ஒரு சதத்தால் கிடைத்த பெருமை!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலம் ICC T20 தொடருக்கான தரவரிசை பட்டியலில் 15 இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சதத்தால் கிடைத்த முன்னேற்றம்

சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ICC கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான விராட் கோலி ஆசிய கோப்பையில் சதமடித்ததன் மூலம் 29 ஆம் இடத்தில் இருந்து 15 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்த தொடரில் 276 ரன்கள் விளாசியதன் மூலம் அவரது ரன் ரேட்டும் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் விராட் கோலிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14வது இடத்தில் நீடிக்கிறார்.

மேலும் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஷ்வானும், 2 வது இடத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஐடன் மார்க்ராமும் உள்ளனர். இதே போன்று பந்து வீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தப்ரைஸ் ஷம்சி 2 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் 7 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முகமது நபி 2வது இடத்தில் நீடிக்கிறார். மேலும் இந்த பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தற்போது 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here