ரொனால்டோவுக்கு ஆதரவாக விராட் கோலி…, விமர்சனங்களுக்கு பதிலடி!!

0
ரொனால்டோவுக்கு ஆதரவாக விராட் கோலி..., விமர்சனங்களுக்கு பதிலடி!!
ரொனால்டோவுக்கு ஆதரவாக விராட் கோலி..., விமர்சனங்களுக்கு பதிலடி!!

கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ PSG அணிக்கு எதிரான போட்டியில், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, விமர்சித்த அனைவருக்கும் இந்தியாவின் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் கோலி:

உலக கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும், ரொனால்டோவின் ரியாத் XI அணிக்கும் இடையில் சமீபத்தில் போட்டி நடைபெற்றது. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 5-4 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், ரொனால்டோவின் ரியாத் XI அணி தோல்வியை தழுவினாலும், இரு கோல்களை அடித்த ரொனால்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இவரது தீவிர ரசிகரான, இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோவை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ISL : சொந்த மண்ணில் வெற்றி பெறுமா சென்னையின் FC?? ஏடிகே மோகன் பாகன் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

அவர், கூறியிருப்பதாவது, 38 வது வயதிலும், ரொனால்டோ தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கால்பந்து வல்லுநர்கள் சுற்றியுள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும், உலகின் சிறந்த கிளப்பிற்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், தற்போது விமர்சித்த அனைவரும் அமைதியாக உள்ளனர் என்று சிரிக்கும் பொம்மையை போட்டு பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here