கோஹ்லியின் கீரிடத்தில் மற்றொரு வைரக்கல்…, பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்த்திய அற்புதம்…, ஐசிசி புகழாரம்!!

0
கோஹ்லியின் கீரிடத்தில் மற்றொரு வைரக்கல்..., பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்த்திய அற்புதம்..., ஐசிசி புகழாரம்!!
கோஹ்லியின் கீரிடத்தில் மற்றொரு வைரக்கல்..., பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்த்திய அற்புதம்..., ஐசிசி புகழாரம்!!

டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த சிக்ஸரை அனைத்து காலத்திற்கும் சிறந்த டி20 ஷாட் என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.

விராட் கோஹ்லி:

கடந்த மாதம் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் கோலகமாக நடைபெற்றது வந்தது. இந்த தொடருக்கான இறுதி போட்டியில், இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நடந்து முடிந்த இந்த டி20 உலக கோப்பை போட்டிகளின் மூலம், ஐசிசி டி20க்கான தரவரிசையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், ஆசிய கோப்பைக்கு முன்பு வரை பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோஹ்லி இந்த உலக கோப்பையில் தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதோடு மட்டுமில்லமால், அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 296 ரன்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். இதனால், ஐசிசியின் பெஸ்ட் லெவன் அணியில் இவர் இடம் பெற்றார்.

ஆஹா…, புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!

இவர் இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 82* ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதில், ஹரிஸ் ரவூப்பின் பந்தில் விராட் கோஹ்லி அடித்த சிக்ஸரை எல்லா காலத்திலும் சிறந்த டி20 ஷாட் என்று தற்போது ஐசிசியானது புகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here