இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி:
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பார்மில் சரிவை சந்தித்தாலும், ஆசிய கோப்பைக்கு பிறகு கிரிக்கெட்டில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கினார். இந்த ஆசிய கோப்பையில் தான் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து பார்மை மீட்டெடுத்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் பிறகு, பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டில் சதம் அடித்தார். இந்த சதத்தின் மூலம், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக, 72 சதங்களை பூர்த்தி செய்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் (71) சாதனையை முறியடித்து, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலி இதுவரை, டெஸ்டில் 27, ஒருநாள் போட்டிகளில் 44 மற்றும் டி20 யில் ஒரு சதமும் என 72 சதங்களை அடித்து அசத்தி உள்ளார். இந்த (2023) வருடத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் வர இருப்பதால், அதிக அளவில் ஒருநாள் போட்டிகளை இந்திய அணி விளையாட இருக்கிறது. இதனால், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் தொட்டு விடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இவ்வாறு இவர் 50 சதங்களை அடித்து விட்டால், இந்த உயரத்தை தொட்ட முதல் வீரர் என்ற பெருமை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.