ஓ.. விராட் கோலி கேப்டன் பதவியை விட்டதற்கு இதான் காரணமா?? – விமர்சிக்கும் ரசிகர்கள்!!

0

நடப்பு ஐபிஎல்  தொடரில் இருந்து பெங்களூர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார்.  இதனால், அவரது ரசிகர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.  இவரது இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என தெரியாமல் கிரிக்கெட் வட்டாரத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.  ஆனால், இவர் பதவி ஏற்ற பின் ஒரு முறை கூட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவில்லை எனவும், அதுவே இதற்கான காரணம் எனவும் பரபரப்பாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பதவி விலகியதன் பின்னணி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், தலை சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் விராட் கோலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது மட்டுமில்லாமல், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, டி20 என அனைத்து அணியின் கேப்டனாகவும் விராட் கோலி தலைமை வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இது தங்களுக்கு மிக பெரிய விருந்து என தோனி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கேப்டன் விராட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தாம் பதவி வகித்து வந்த ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார், இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணமாக, கோலி தலைமையில் பெங்களூர் அணி இதுவரையில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதே சொல்லப்படுகிறது. இதனால் கூட பதவி விலகி இருக்கலாம் என பேசப்படுகிறது.

rcb

இது குறித்து பேசிய கோலி கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவும், இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக பதவி வகித்ததாகவும் தெரிவித்தார். இதில் தற்போது, ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுதான் என்னுடைய கடைசி ஐ.பி.எல் எனவும், என்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டி வரையில் நான் பெங்களூரு அணியின் சிறந்த வீரனாக தொடர்வேன் எனவும் உறுதியளித்துள்ளார். இதுவரை தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here