விராட் கோஹ்லியின் பெஸ்ட் சிக்ஸர் இது தான்…, பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!

0
விராட் கோஹ்லியின் பெஸ்ட் சிக்ஸர் இது தான்..., பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!
விராட் கோஹ்லியின் பெஸ்ட் சிக்ஸர் இது தான்..., பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோஹ்லி அடித்த ஹிட் சிக்ஸர் குறித்து, பந்து வீசிய ஹரிஸ் ரவூப் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி:

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறி இருந்தாலும், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்தது ரசிகர்களுக்கு ஆதரவாக இருந்தது. இதில், குறிப்பாக விராட் கோஹ்லி, ஒட்டுமொத்த டி20 உலக கோப்பையிலும் 1100 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர், நடப்பு ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 82* ரன்கள் எடுத்திருந்தார். இதில், ஹரிஸ் ரவூப்பின் பந்தியில் இவர் அடித்த சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. இந்த சிக்ஸரை எல்லா காலத்திலும் சிறந்த டி20 ஷாட் என்று ஐசிசியே புகழ்ந்திருந்தது. இந்த போட்டியை குறித்து விராட் கோஹ்லியும் சமீபத்தில், டி20 உலக கோப்பையின் சிறந்த தருணம் என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கே எல் ராகுலுக்கு ஓய்வு கொடுத்த பிசிசிஐ…, இதுக்கு தான் இந்த திடீர் முடிவா??

இந்நிலையில், விராட் கோஹ்லி அந்த அற்புதமான சிக்ஸர் அடிக்க காரணமாக இருந்த பாகிஸ்தானின் ஹரிஸ் ரவூப் சில கருத்துக்களை கூறியுள்ளார். இவர் கூறியதாவது, என்னுடைய பந்து வீச்சில், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்றோர் இதுபோன்ற சிக்ஸர் அடித்திருந்தால் வருத்தம் அடைந்திருப்பேன். ஆனால், விராட் கோஹ்லி அடித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட சாதனை என்று பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here