தசாப்தத்தின் ‘சிறந்த ஒருநாள் வீரர்’ விராட் கோஹ்லி, தோனிக்கும் விருது – ஐசிசி அறிவிப்பு!!

0

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் கான கிரிக்கெட் வீரர் விராட்கோஹ்லி என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் கிரிக்கெட் என்ற விருதை மகேந்திர சிங் தோனிக்கு அளித்து சிறப்பித்துள்ளனர்.

விராட் கோஹ்லி :

கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுபவர் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. இவர் சர்வதேச போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் சச்சினின் சாதனையை இவர் முறியடிப்பார் என்று பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர் தனது அணிக்காக 10000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். இதில் 39 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் மட்டும் அல்லாமல் இவர் பீல்டிங்கிலும் அசத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இவர் 112 கேட்சுகளை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது பேட்டிங் சராசரி 61.83 ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஐசிசி மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டி 20 வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் இதனை வாக்களிப்பி மூலம் தேர்வு செய்கின்றனர்.

அதன் பின் 2011 ஆம் ஆண்டு நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் நடந்த மாறுப்பட்ட கருத்தால் தோணி அவுட் என அறிவிக்கப்பட்டார். அப்பொழுது அவர் 137 ரன் எடுத்திருந்தார். அப்பொழுது கேப்டனாக இருந்ததால் மீண்டும் விளையாட அழைக்கப்பட்டார். இது எப்பொழுது ஒரு நீங்காத நினைவாகவே இருப்பதால் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்ற விருதை மகேந்திர சிங் தோனிக்கு அளித்து சிறப்பித்துள்ளனர்.

இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற என்று தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை பெற்றுள்ளார். இதனை ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஆன் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரிவில் அஸ்வின், சங்ககாரா, ஸ்மித், டீவில்லியர்ஸ் மற்றும் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here