அடிலெய்டு ஓவலில் தொடருமா விராட் கோஹ்லியின் அதிரடி…, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

விராட் கோஹ்லிக்கு நெருக்கமான அடிலெய்டு ஓவல் மைதானத்தில், இன்று பங்களாதேஷுக்கு எதிராக தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோஹ்லி:

இந்திய அணி இன்று டி20 உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோல்வி அடைந்து, 4 புள்ளிகளுடன் குரூப் 2வில் 2வது இடத்தில் உள்ளது.

நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் விராட் கோஹ்லி, முதலிரண்டு போட்டிகளில் 82, 62 என அரைசதம் அடித்ததுடன் மொத்தமாக 156 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், இன்றைய போட்டி நடைபெறும் அடிலெய்டு ஓவல் மைதானமானது, இவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேற போவது யார்??

அதாவது, இந்த மைதானத்தில் இவர் 2016 ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் களமிறங்கி 55 பந்தில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, 2019ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். இதனால், இன்று பங்களாதேஷுக்கு எதிராகவும் விராட் கோஹ்லி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here