பிசிசிஐயின் 20 பேர் கொண்ட வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலியுடன் இவரது பார்ட்னர்ஷிப் தொடரும் என ஸ்ரீகாந்த் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்த்:
ஐசிசி சார்பாக இந்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து அணிகள் பங்கு பெற உள்ளன. 20 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ இந்த தொடருக்காக தயார் செய்து வைத்துள்ளதாக, சமீபத்தில் நடந்த கவுன்சிலிங் கூட்டத்தின் முடிவில் தெரிவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பிசிசிஐ தேர்வு செய்து வைத்துள்ள அந்த 20 வீரர்களை மட்டுமே, சுழற்சி முறையில் எதிர் வரும் ஒருநாள் தொடர்களில் பயன்படுத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த 20 வீரர்களின் பெயர்களை பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் இந்த 20 வீரர்களில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சிலர் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், கடந்த 2011ல் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் கவுதம் கம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இவரை போல, எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில், விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் அடித்து அற்புதமாக செயல்பட்டு இருந்தனர். இதே பார்ட்னர்ஷிப் உலக கோப்பையிலும் தொடரும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.