விராட் கோஹ்லி & அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண் குழந்தை:

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மற்றும் பங்கேற்று விட்டு நாடு திரும்பினார். இன்று மதியம் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோஹ்லி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் நடிகை – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

விராட் கோஹ்லியின் பதிவில், “இன்று பிற்பகல் ஒரு பெண் குழந்தையுடன் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்” என கூறி உள்ளார். விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here