ரஹானே கேப்டன்ஷி – விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!!

0

ஆஸ்திரேலிய ஏ அணியுடன் நடைபெற்ற நடைபெற்ற இரு பயிற்சி ஆட்டங்களிலுமே ரஹானே கேப்டனாக சிறப்பாக செயல்பட்டர் என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.

கேப்டன் ரஹானே:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒரு நாள்,3டி 20 மட்டும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் முடிந்த நிலையில் இன்று அடிலெய்டில் வைத்து முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது. முதல் போட்டி மட்டும் பகலிரவு ஆட்டமாக நடக்கும். இந்நிலையில் முதல் போட்டியில் மற்றும் கேப்டனாக விராட் கோஹ்லி செயல்படுவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மற்ற போட்டிகளில் இருந்து கேப்டன் விராட் கோஹ்லி விடைபெற்றுள்ளார். அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்க போகும் நிலையில், அவர் தனது மனைவியுடன் தனது நேரத்தை செலவிட வேண்டும் என்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தவுள்ளார்.

சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார் – விராட் கோஹ்லி!!

இரு பயிற்சி ஆட்டங்களிலும் ரஹானே ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அணியின் சூழ்நிலைகளை அறிந்தும் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து களத்தில் அருமையாக செயல்பட்டார். நாங்கள் பல ஆண்டுகளாக பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம்.

virat shared a latest video in instagram 

எங்களிடம் புரிதல் மிகவும் சிறப்பாக உள்ளது. நான் எந்த நிலையில் அணியை விட்டு செல்கின்றேனோ அதே போல் அணியை சிறப்பாக செயல்படுத்துவார் என்பதும் எனக்கு சந்தேகமே இல்லை,அது மட்டுமல்லாமல் அவர் கேப்டனாக மற்றும் ஒரு வீரராக சிறப்பாக செயல்பட இதுவே சரியான நேரம் என்று கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

தீவிரமாக தன்னை தயாராக்குவார் – சச்சின் டெண்டுல்கர்!!

ரஹானே மிகவும் ஆற்றல் மிக்கவர், அதுமட்டுமல்லாமல் கூர்மையாக சிந்தித்து செயல் படும் வீரரும் ஆவார்.சமநிலையுடன் சிறப்பாக களத்தில் செயல் படுவார்.இவர் எந்த தொடரில் பங்கேற்றாலும் அதற்காக தன்னை தீவிரமாக தாயாராக்குவதில் வல்லவர். அவரிடம் மிகுந்த ஆக்ரோஷம் உள்ளது.

ஆனால் அதை தேவைப்படும் இடத்தில் மட்டுமே பயன்படுத்துவார். அதுவே எனக்கு பிடித்த விஷயம். இதனை அவரிடம் பழகும் நாட்களில் நான் அறிந்து கொண்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here