“நான் கேப்டனாக இருந்தபோது பல தவறுகளைச் செய்தேன்”…, உண்மைகளை உடைத்த விராட் கோலி!!

0
"நான் கேப்டனாக இருந்தபோது பல தவறுகளைச் செய்தேன்"..., உண்மைகளை உடைத்த விராட் கோலி!!

நடப்பு ஐபிஎல் தொடரில், RCB அணி பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், விராட் கோலி தனது கேப்டன்சி குறித்து மனம் திறந்துள்ளார்.

RCB:

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது, இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது 16 வது சீசன் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த சீசன்களில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளாக வலம் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியோ, அதிக முறை 2வது இடத்தை பிடித்த அணியாக மட்டுமே திகழ்கிறது. இந்த அணியின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவை RCB நடப்பு ஐபிஎல் சீசனில் நிறைவேற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை விளையாடிய 11 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது பெரும் கேள்வி குறியாகி உள்ளது.

“இந்திய தேர்வாளராக நான் இருந்திருந்தால், இந்த வீரரை இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!!

இந்நிலையில், RCB அணியின் விராட் கோலி ஐபிஎல் பயணம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது, “நான் கேப்டனாக இருந்தபோது பல தவறுகளைச் செய்தேன், ஆனால் எனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், அணியை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது குறிக்கோள், தோல்விகள் நடக்கும், ஆனால் நோக்கம் ஒருபோதும் மாறியது இல்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here